மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த இயக்குனர்களை அவதூறாக பேசியதால் கேரளாவில் கைதாகி புழல் சிறையில் இருக்கிறார் நடிகை மீரா மிதுன்.. இந்த நிலையில் யூடியூப் நிறுவனத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்குமாறு கடிதம் எழுதி நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார்கள்..