ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதனை தொடர்ந்து ராமேஸ்வரம்மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் சிறைபிடிக்கப்பட்ட அந்த மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி 26ம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (மார்ச் 26) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் நாளை ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த போராட்டத்திற்கு மண்டபம் பகுதி மீனவர்களும் ஆதரவு தெரிவித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.