Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மிகப் பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி…!!!

மிகப் பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிகப் பிரபல தமிழ் நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனருமான கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு கொரோனா இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.சில படங்களில் கௌரவ கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் இவர். சில தினங்களுக்கு முன்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

மேலும் அரசரின் தனது நிலைப்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். நேற்று இரவு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக தேர்தல் பணிகளை செய்து வந்தார். அப்போது அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories

Tech |