அதிமுகவில் கடந்து சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூலை 11) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ஸ்ரீவாரி மண்டபத்தில் நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்று உள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் பொதுக்குழு தொடங்க உள்ளது.
இந்நிலையில் இபிஎஸ் பொது குழு நடக்கும் வானரகத்திற்கு சென்ற நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் செல்வதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் நோக்கில் ஓபிஎஸ் இந்த அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் ஆதரவாளர்களும் குவிந்துள்ளதால் இரு தரப்பினருக்கும் இடையே மிகப் பெரிய மோதல் ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.