மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 1,000 ரூபாயிலிருந்து ரூபாய் 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கி பின் உரையாற்றினார்.. அப்போது அவர், ஒரு மாற்றுத்திறனாளி கூட வருத்தப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உட்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் ரூபாய் 1500 ஆக அதிகரிக்கப்படும். தமிழ்நாட்டில் 4,39,315 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றி அமைக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.