சென்னை அயனாவரத்தில் 16 வயது மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 11 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி தனது புத்தகத்தில் எல்லாம் முடிந்துவிட்டது என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபகாலமாக மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Categories
#BREAKING: மாணவி தூக்கிட்டு தற்கொலை…. பின்னணி என்ன?…. பெரும் சோகம்…..!!!!!
