தமிழக பொறியியல் கல்லூரிகளில் M.E , M.Tech உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில் பங்கேற்க கேட் அல்லது டான்செட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்-லைன் விண்ணப்ப தேதி அக்டோபர் 11ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் M.E , M.Tech , M.arch படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வும், MBBS, BDS கலந்தாய்வும் ஜனவரிக்கு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. EWS மற்றும் வன்னிய சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஜனவரி இரண்டாவது வாரத்தில் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.