மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெங்கடாசலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்தபோது, லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து வைத்திருப்பதாக சேலம் அம்மம்பாளையம் வீடு உட்பட இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.. இந்த சோதனையில் 8 கிலோ தங்கம், 10 கிலோ சந்தன பொருட்கள் 13.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது..
இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார்.. இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் தலைமைச் செயலக காலனி வீட்டில் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.