பிரபல இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர்கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த சிகிச்சையில் அவருக்கு வயிற்று பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிறகு அவர் குணம் அடைந்து வந்தாலும் தொடர்ந்து மருத்துவமனையில் ஓய்வுக்காக இருந்தார். இதனைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தற்போது நடிகர் டி.ராஜேந்தர் வயிற்றில் ரத்தக் கசிவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் நலமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவருடன் மகன் சிம்பு மற்றும் மனைவி உஷா ராஜேந்தர் ஆகியோர் உள்ளனர். அவர் விரைவில் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.அவர் நலம் பெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.