Categories
மாநில செய்திகள்

BREAKING: மதுரை சித்திரை திருவிழா நெரிசலில் 2 பேர் பலி… பெரும் பரபரப்பு….!!!

உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய பகுதியாக அழகர்கோவில் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று மாலை புறப்பட்டார். இவரைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. அதன்பிறகு சுந்தரராஜ பெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளர் வேடத்தில் கைகளில் நேரிகொம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். செல்லும் வழி நெடுக அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளழகர் மதுரை மாநகருக்குள் வருவதால் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர். அவர் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.

இதனைத் தொடர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்க புறப்பட்டார். இன்று அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினா.ர். இந்நிலையில் மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை காண சுமார் 10 லட்சம் பேர் கூடிய நிலையில், நெரிசலில் சிக்கி ஒரு ஆண் ஒரு பெண் என இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |