Categories
மாநில செய்திகள்

Breaking: பொள்ளாச்சி வழக்கு – அதிமுகவிலிருந்து அருளானந்தம் நீக்கம்

அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

அதிமுகவில் கொள்கைக்கும் கோட்பாட்டுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தினாலும் கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி வைக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார்கள்.

அருளானந்தம் சிபிஐயால் கைது கைது செய்யப்பட்டதையடுத்து பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீவிரமாக இருக்கிறது. அதிமுகவினர் இதில் யாரும் இல்லை என்று சொல்லி வந்த நிலையில் தற்போது அருளானந்தத்தை கைது செய்ததன் அடிப்படையில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் கட்சியில் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.

Categories

Tech |