பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என 5 நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அனைவரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இட ஒதுக்கீடு பயன்படுகிறதுஎன்றும், 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்திற்கு எதிரானதாக அமையவில்லை என்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.