Categories
தேசிய செய்திகள்

Breaking: பொதுத்தேர்வு ரத்து…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

நாடு முழுவதும் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி நடக்க இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்வதற்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக சிபிஎஸ்இ மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் மே 4ஆம் தேதி முதல் தொடங்குகிற சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கான சூழல் குறித்து ஜூன் 17 ஆய்வு நடத்தி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |