Categories
மாநில செய்திகள்

BREAKING : பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு….. வழிகாட்டு நெறிமுறை…. தமிழக அரசு அதிரடி….!!!

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார், அதற்கான பொருட்களை பேக்கிங் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட உள்ளது.

20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு 1,088 கோடி ரூபாயும், கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  ஜனவரி 3 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டிய முழுப் பொறுப்பும் தமிழக அரசையே சாரும். நியாயவிலை கடைகளில் ஜனவரி 7-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு விற்பனை முனைய இயந்திரத்தின் ( POS ) மூலம் வழங்கப்பட வேண்டும்.  விடுதல் இன்றி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |