நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் இருக்கும் நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மக்கள் நலன் சார்ந்து பாதுகாப்பு பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரமாக புயலை கண்காணித்து, தடுப்பு – மீட்பு பணிகள் தயார் நிலையில் இருக்கின்றன. இதனிடையே தமிழக அரசு சார்பில் பல்வேறு உத்தரவுகள், கட்டுப்பாடுகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காய்கறி, மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும். புயல் முன்னெச்சரிக்கையாக மக்கள் பொருட்கள் வாங்க செல்வதால் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.