புதுச்சேரியில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். அதன்படி இன்று இரவு 7 மணி முதல் 7ஆம் தேதி காலை 7 மணி வரை இருசக்கர வாகனப் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டமாகக் கூடுதல் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த கூடாது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.