விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.. மேலும் அவர், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்..
முன்னதாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை பொது வழியில் வைத்து கொண்டாடக்கூடாது என்று தமிழக அரசு தடை விதித்து, வீடுகளில் வைத்து பொதுமக்கள் வழிபடலாம் என்றும் அறிவுறுத்தியது.. ஆனால் இதற்கு பாஜக கட்டுப்பாடுகளை விதித்து பொது வெளியில் வழிபடலாம் என்று அரசு சொல்லி இருக்கலாம்.. ஆனால் கொண்டாட தடை விதித்தது ஏற்கத்தக்கதல்ல என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது..