புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலத்திலும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதுச்சேரி அரசு நிவாரணம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு மழை, வெள்ள நிவாரணமாக ரூ 5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 5000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.