Categories
தேசிய செய்திகள்

#BREAKING: புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. உணவகங்கள், பார்கள், மது கூடங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி. மால்கள், வணிக நிறுவனங்களில் 50 சதவீதம் பேருக்கு அனுமதி. வெளிநாடுகளில் இருந்து வரும் வாகனங்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி.கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகள் நடத்த அனுமதி. கோவில்களில் பக்தர்கள் இன்றி கும்பாபிஷேகம் நடத்த அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Categories

Tech |