Categories
தேசிய செய்திகள்

BREAKING: புதிய அமைச்சரவை பட்டியல்… புதுச்சேரி மாநில அரசு வெளியீடு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவையில் பொறுப்பேற்க உள்ள புதிய அமைச்சர்களின் பட்டியலை அம்மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான கட்சி ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்பு என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான அமைச்சரவை பதவிகளுக்கான பங்கீடு முடிவடைந்தது.

புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவையில் பொறுப்பேற்க உள்ள புதிய அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, ஏகே சாய் சரவணகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை மறுநாள் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.

Categories

Tech |