பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று பாதிப்பால் மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் லதா மங்கேஷ்கர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது (வெண்டிலேட்டர்) எனவும் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார் எனவும் மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசம் அடைந்தது. அவரது காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும் லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடி உள்ள லதா மங்கேஷ்கர் இந்தியாவின் “இசைக்குயில்” என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.