தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அந்த வரிசையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல தமிழ் நடிகரும் தயாரிப்பாளரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா பாதிப்பால் காலமானார். டிவி தொடர்களில் நடித்து வந்த வெங்கட் சுபா, டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலில் சினிமா விமர்சனமும் செய்து வந்தார். இவர் மொழி, கண்ட நாள் முதல், அழகிய தீயே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.