இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டா மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து சென்ற பாஜகவின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டா பாஜகவில் இணைந்தார். மேற்கு வங்கத்தை சேர்ந்த அவர் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இன்று மதியம் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் டிண்டா பாஜகவில் இணைந்துள்ளார்.