Categories
தேசிய செய்திகள்

Breaking: பிப்ரவரி வரை கிடையாது… பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இயலாது என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பது பற்றிய அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை.

அதனால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இன்று ஆலோசனை நடத்தினர். மாணவர்களின் கருத்துகளை கேட்டறிந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுடன் மத்திய அமைச்சர் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி திறப்பு, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் எவ்வாறு தேர்வை நடத்தி முடிப்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடந்த வாய்ப்பில்லை என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இயலாது. தேர்வுகளை நடத்துவது தொடர்பான முடிவு பிறகு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |