முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில் தற்போது காமராஜ் மார்க் வழியாக கண்டோன்மெண்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் இலங்கை, பூடான், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் ராணுவ தளபதிகள் பங்கேற்றுள்ளனர். டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories
BREAKING : பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கியது…. கண்ணீர்…!!!
