சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ( கமலாலயம் ) மர்ம நபர்களால் மூன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சிக்கிய சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்மநபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பாஜக தலைமை அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.