நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா,சத்தீஸ்கர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.இதற்கு முன்னதாக நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் உள்ளிட்ட பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் பிரிவினருக்கு கிடைக்கும் என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.