தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு எண் கணித பாட வினாத்தாள் கசிந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதல் கட்ட திருப்புதல் தேர்வின்போது வினாத்தாள்கள் கசிந்து சர்ச்சையான நிலையில் இதுபோன்ற தவறு நிகழாமல் இருக்க அந்தந்த பள்ளிகளிலேயே விடைத்தாள்கள் திருத்தும் மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வினாத்தாள் கசிந்துள்ளது.
இந்நிலையில் பொதுத்தேர்வுகள் மிகவும் பாதுகாப்பாக நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். வினாத்தாள் இருக்கும் இடங்களில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சோதனை என்ற பெயரில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வினாத்தாளை கசியவிடுவோர் யாராக இருந்தாலும் கடும் தண்டனை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் கசிந்த வினாத்தாளில் இருந்த கேள்விகள் எதுவும் தேர்வுகளில் இடம்பெறாது என அவர் தெரிவித்துள்ளார்.