குமரியில் பயங்கர மோதல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரிகள் சூறையாடப்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மாமுட்டு கடை பகுதியில் பாதை பிரச்சனையில் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கல்லூரி சேர்மன் பிரான்ஸ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் உட்பட 50 பேர் கொண்ட கும்பல் பள்ளி, கல்லூரியை சூறையாடியது. இதையடுத்து நொடிக்கு நொடி பதற்றம் அதிகரிப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.