நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. ஒருசில மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பகுதி ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் திரையரங்கம், உடற்பயிற்சி கூடம், விருந்து மண்டபம், பள்ளி மற்றும் கல்லூரிகளை மூடவும், அத்தியாவசியமற்ற கடைகளை சுழற்சி முறையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், உணவகங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்டவை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.