Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : பண மோசடி…. நடிகர் விமல் புகார்…. திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது..!!

பண மோசடி தொடர்பாக நடிகர் விமல் அளித்த புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் நடிகர் விமல் தந்த பண மோசடி புகாரின் பேரில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் விருகம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.. தயாரிப்பாளர் சிங்காரவேலனின் நண்பர்கள் கோபி, திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் தொடர்பாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் – விமல் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சிங்காரவேலன் தன்னுடைய பெயரை பயன்படுத்தி போலியான ஆவணங்கள் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டதாக விமல் புகார் கொடுத்திருந்தார்..

அந்த புகார் தொடர்பாக கடந்த 2021ஆம் ஆண்டு சிங்காரவேலன் மற்றும் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் சிங்காரவேலன் நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் பெற்றார். ஆனால் இந்த விஷயம் தொடர்பாக நீதிமன்றம் சிங்காரவேலனுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. குறிப்பாக ஒரு மாதத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு சிங்காரவேலன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது..

ஆனால் அந்த உத்தரவை சிங்காரவேலன் பின்பற்றாத காரணத்தால் முதல் வழக்கில் சிங்காரவேலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. இரண்டாவது ஒரு புகாரும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் விமல் கொடுத்திருக்கிறார்.. அது தொடர்பாக  5 பிரிவுகளின் கீழ் சிங்காரவேலன், கோபி, திருநாவுக்கரசு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விமல் நடித்து இருக்கக்கூடிய விலங்கு என்ற வெப் சீரியஸ்  தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், தன்னுடைய பெயரை பயன்படுத்தி போலியான காசோலைகள் மூலம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சிங்காரவேலன் மீது நடிகர் விமல் புகார் கொடுத்திருந்தார்.. அந்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. அந்த வழக்கில் தற்போது சிங்காரவேலனை கைது செய்ய உள்ளனர்.. இந்த இரண்டு வழக்குகள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Categories

Tech |