விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் முன்பு 23 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பாறைப்பட்டியில் உள்ள ஆர்.வி.பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தபோது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி தவித்த தொழிலாளர்களை மீட்க தீயணைப்பு படையினர் விரைந்து உள்ளனர். இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களில் இது மூன்றாவது வெடி விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.