Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 12 பேர் பலி…!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் 30 க்கும் மேற்பட்ட அறைகளும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த பயங்கர வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 20 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மூன்று பேர் உயிர் இழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories

Tech |