Categories
மாநில செய்திகள்

BREAKING : நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சோதனை…. கணக்கில் வராத ரூ 70 லட்சம் பறிமுதல்…!!

திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் வாங்க கூடும் என என பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை  அதிரடி சோதனை நடத்தியது. அதன்படி இன்று தமிழக முழுவதும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட இடங்களில் லஞ்சஒழிப்பு காவல்துறையினர் கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் ஆய்வாளர் சித்ரா, ஆய்வாளர் அருள் பிரசாத் உள்ளிட்ட 12 லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் திருவாரூரில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் 70 லட்சம் ரூபாய் பணம் என்பது ஒரு அறையில் தனியாக வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் பணத்தை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த பணம் கணக்கில் வராத பணமாக இருக்கிறது இதை யார் யாருக்காக கொடுக்கப்பட்டது? என்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் தீவிர விசாரணை என்பது லஞ்ச ஒழிப்பு காவல் துறையால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த சோதனை என்பது தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |