நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மத்திய அமைச்சருடன் முதல்வர் தொலைபேசியில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆண்டு தொடக்கம் முதலே பருத்தி, நூல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இதனால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன. நூல் விலை உயர்வினால் தமிழகத்தின் ஜவுளி தொழில் எதிர்கொள்ளும் இடையூறுகள் ஏராளம்.
இதுதொடர்பாக மத்திய ஜவுளித் துறை அமைச்சருடன் முதலமைச்சர் தொலைபேசியில் அழைத்து பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்த கோரி பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் எதிர்கொள்ளும் இடையூறுகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.