நீட் தேர்வை ஏற்க முடியாது என்று தமிழக சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சேர விரும்பினால் முதலில் நீட் தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்ற பிறகு அதில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்கப்படும். கடந்த வருடம் அரசுப்பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் மூலம் ஏராளமான மாணவர்கள் மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பில்லை. தமிழகத்தில் ஏற்கனவே அமல்படுத்தி வரும் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.