தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது தொடரப்பட்ட 868 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 422 வழக்குகளும், நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான 446 வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய அரசு கொண்டு வந்த குடியரிமை திருத்த சட்டம், வேளாண்மை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பல வழக்குகள் இருந்தன.. அதில் 5500க்கும் மேற்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.