நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மின் வெட்டு ஏற்பட்டது. இதற்கு காரணமாக சொல்லப்பட்டது மத்திய அரசு தொகுப்பிலிருந்து போதுமான நிலக்கரி தமிழகத்திற்கு வரவில்லை.. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்வெட்டு ஏற்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது..
இந்நிலையில் தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1வது அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2, 3, 4 மற்றும் 5வது அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.