தமிழக அரசின் நிதித்துறை வளாகத்திற்கு பெயர் மாற்றம் செய்ததை தொடர்ந்து அதிமுக அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
நந்தனத்தில் ஒருங்கிணைந்த நிதித் துறை அலுவலக வளாகம் பெயரை திமுக அரசு மாற்றியுள்ளது. அம்மா வளாகம் என்றிருந்த அலுவலக வளாகத்தின் பெயரை மாற்றம் செய்து பெரியார் க அன்பழகன் மாளிகை என்று வைத்துள்ளனர். அங்கு அன்பழகனுக்கு சிலை வைப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் வளாகத்தின் பெயரை மாற்றியது நாகரிகமற்ற செயல் என்றும், அம்மா வளாகம் என்று இருந்த அலுவலக வளாகத்தின் பெயரை மாற்றம் செய்தது கண்டனத்துக்குரியது என்று ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.