Categories
தேசிய செய்திகள்

#BREAKING : நாளை முதல்…..டெல்லியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!!

காற்று மாசு அதிகரிப்பால் நாளை முதல் டெல்லியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றுமாசுபாடு மிக அதிகமாக இருக்கிறது. இந்த காற்று என்பது சுவாசிக்க தகுதியற்ற காற்று என அரசு தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக காற்றின் தர குறியீடு என்பது 400 முதல் 500 என்று அதிகளவில் மிக மோசம் என்ற நிலையில் தொடர்ச்சியாக இருக்கிறது. இது அபாயம் என்ற கட்டத்தை நெருங்கி இருப்பதன் காரணமாக டெல்லி மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. டெல்லிக்குள்  வாகனங்கள் வருவதற்கு கட்டுப்பாடு, அதேபோல காற்று மாசுபாடு ஏற்படுத்தினால் கடுமையான நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், காற்று மாசு அதிகரிப்பால் நாளைமுதல் டெல்லியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். காற்றின் தரம் மேம்படும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அவர் அறிவித்துள்ளார்.. அதேபோன்று ஐந்தாம் வகுப்பு மேல் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகள், செயல்பாடுகள் மைதானத்திற்கு சென்று கற்பது உட்பட அனைத்தும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |