தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செய்துகொள்வதற்கு நாளை முதல் கோவின் ஆப் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவி வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. மேலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தற்போது தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு மக்கள் முன்பு இருந்ததைவிட தற்போது ஆர்வமாக வந்து தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்கின்றனர்.
தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தபட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நாளை முதல் கோவின் ஆப் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டுமே செலுத்தி கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது. அரசு கொள்முதல் கொள்கையை மாற்றி அமைப்பதால், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செல்ல கோவின் ஆப் மூலம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.