தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே கனமழை காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.