தமிழகம் முழுவதும் காய்ச்சல் தொடர்பாக நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், சளி, காய்ச்சல் என எந்த அறிகுறி இருந்தாலும் இந்த சிறப்பு முகாமில் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இந்த முகாமை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories
BREAKING: நாளை தமிழகம் முழுவதும்….. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!
