Categories
மாநில செய்திகள்

#BREAKING : நவ., 28 முதல் டிசம்பர் 31 வரை….. மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதற்காக சிறப்பு முகாம்… தமிழக அரசு அறிவிப்பு.!!

மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதற்காக சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது..

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்ந்து ஒரு பெரிய சிக்கலாக, பொதுமக்கள் சிரமப்படக்கூடிய நிலையில், தமிழக அரசு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய 2,811 பிரிவு அலுவலகங்களிலும் வருகின்ற 28ஆம் தேதி, அதாவது திங்கள்கிழமை முதல் வரும் 31ஆம் தேதி டிசம்பர் மாதம் இறுதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை தினங்களை தவிர்த்து ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5 : 15 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும் என மின்சார மின்சாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும்  இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய மின் இணைப்பு எண் மற்றும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு செய்து குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் பல இடங்களில் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலை இருக்கக்கூடிய நிலையில், டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய மின் கட்டணத்தினை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் செலுத்திக்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள சிறப்பு முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான தமிழகத்தில் இருக்கக்கூடிய 2,811 பிரிவு அலுவலகங்களிலும் நடைபெறும் எனவும், நேரம் பொருத்தவரையில் காலை 10:30 மணியிலிருந்து மாலை 5 : 15 வரை இந்த சிறப்பு முகம் நடைபெறும்.. எனவே இண்டர்நெட் வசதி இல்லாதவர்கள் இலவசமாக சென்று அருகில் இருக்கக்கூடிய பிரிவு அலுவலகங்களில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |