விக்ரம் தமிழ் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது, ஐ, விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ளிட்ட தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.
இந்நிலையில் நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.