Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகர் ரஜினியின் “அண்ணாத்த” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!!!!

ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து கொண்டு இருக்கிறது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நடிகர் ரஜினி நீண்ட வருடத்திற்கு பிறகு குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் நடித்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட உள்ளது.

Categories

Tech |