Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: தொடர் கனமழை…. போக்குவரத்து திடீர் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை முதலே சென்னையில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் அனைத்து சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் கனமழையால் கேகே நகர், ராஜமன்னார் சாலை, மயிலாப்பூர் சிவகாமி சாலை, ஈசிஆர் சாலை, காந்தி-இர்வின் சந்திப்பு முதல் நாயர் பாலம் வரை, செம்பியம் ஜவஹர் நகர் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே புளியந்தோப்பு அம்பேத்கர் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, பட்டாளம் மணிக்கூண்டு வரையும், வியாசர்பாடி -முல்லை நகர் காலம் வரையும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |