தூத்துக்குடி மாவட்டத்திற்கு கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 27ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முதலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.