வேளாண் மண்டலமாக அறிவததற்கு திமுக அனுமதி வாங்கி தர வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததோடு நிறைவடைந்த கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
பின்னர் தொடங்கிய பேரவையில் பேசிய முதல்வர் , அதிமுக நாடளுமன்ற உறுப்பினர்கள் சீட்டை தேய்த்து கொண்டிருக்கிறார்கள் என திமுக குற்றம்சாட்டியது என்று தெரிவித்த முதல்வர் , நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை வைத்துள்ள திமுக வேளாண் மண்டலத்திற்கு அனுமதி வாங்கி தரவேண்டும் என்று முதல்வர் தெரிவித்தார்.
இதையடுத்து திமுக சார்பில் , டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அதிமுக அறிவித்ததை நாங்கள் வரவேற்கின்றோம். மீத்தேன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதன் பின் வேளாண் மண்டலமாக அறிவித்தால் முழுமனதோடு வரவேற்போம் . நாங்கள் மத்திய அரசுடன் எதிரும் , புதிருமாக உள்ளோம். நீங்கள் தான் இணக்கமாய் உள்ளீர்கள் என்று திமுக துரைமுருகன் தெரிவித்தார்.