செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவெற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்கள் சீமானுக்கு உடனடியாக முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .